வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் இல்லாத வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி தீவிரமாக நடந்து வந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனை செய்து, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று (மே 5ல்) மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.