பா.ஜ., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.
தாக்குதலை கொண்டாடும் வகையில் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் நேரு சிலை அருகில் பா.ஜ., தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கட்சியினர் கொண்டாடினர். நகர தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.