கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு
தேனி கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை பாரா மெடிக்கல் கல்லுாரியில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், மாணவ, மாணவிகளுக்கு இணைய வழி குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சைபர் கிரைம்இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, பாதுகாப்பாய் பயணியுங்கள் உங்கள் அலைபேசியில்,’என்ற தலைப்பில் பேசினார்.
இதில் அலைபேசியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். செயலிகள் மூலம் மோசடி எவ்வாறு நடக்கின்றன. அதில்இருந்து தப்பித்து பயனுள்ள முறைகளில் அலைபேசியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என விளக்கினார். தொழில்நுட்பப் பிரிவு எஸ்.ஐ., அழகுபாண்டி பேசினார். கல்லுாரி முதல்வர் நித்துமா நன்றி கூறினார்.