மின்வாரிய ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம்முன், மின்வாரியம் பொதுத்துறையாக நீடித்திட வேண்டும்.
விதவை மகள், கணவனால் கைவிடப்பட்ட பெண், விவாகரத்தான மகள், மாற்றுத் திறனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும், ஸ்மார்ட் மீட்டர்பொருத்துவதை மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி கிளைத் தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார்.நிர்வாகி சுப்புத்தாயி முன்னிலை வகித்தார்.
தேனி கிளைச் செயலாளர் மாரிச்சாமி, மாநில துணைத் தலைவர் சந்திரசேகரன் பேசினர்.
கிளைப் பொருளாளர் அமிர்தவேல் பாண்டியன் நன்றி கூறினார்.