உலக காசநோய் ஒழிப்பு தின விழா
தேனி,: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உலக காசநோய்ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். காசநோய் தொற்று இல்லாத நிலையை அடைந்ததற்காக 6 ஊராட்சிகளுக்கு பாராட்டுசான்றிதழ்களை வழங்கினார்.
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக நடத்திய பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், காசநோய் ஒழிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு, தனியார் மருத்துவமனைகள், தொண்டுநிறுவனங்களுக்கு கேடயங்களை வழங்கினார்.
மருத்துவக்கல்லுாரி முதல்வர் முத்துச்சித்ரா, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் கலைச்செல்வி, காசநோய்த்துறை துணை இயக்குனர் இராஜபிரகாஷ்பலர் பங்கேற்றனர்