உலகத் தாய்மொழி தின உறுதி மொழியேற்பு
தேனி, பிப். 22: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 21ம் தேதி உலகத் தாய்மொழி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி, இந்நாளில் உலக தாய்மொழி தின உறுதிமொழியேற்க கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதன்படி, நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். இதில் வில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனபாதுகாவலர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்தா, வேளாண்மை இணை இயக்குநர் சாந்தாமணி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனர்.