20 ஆயிரம் வேப்பங்கன்றுகள் இலவசமாக வழங்க ஏற்பாடு
மாவட்ட விவசாயிகளுக்கு மாநில அரசு திட்டத்தில் ஆகஸ்டில் 20 ஆயிரம் வேப்பங்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காத்தல் திட்டத்தில் விவசாயிகளுக்கு வேப்பங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில்விவசாய நிலத்தின் வரப்புகளில் நடவு செய்பவர்களுக்கு ஏக்கருக்கு 60 கன்றுகளும், அடர் நடவு செய்பவர்களுக்கு ஏக்கருக்கு தலா 200 வேப்பங்கன்றுகளும் வழங்கப்பட உள்ளது. வேப்பங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்படும். மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தலா 2500 மரக்கன்றுகள் வீதம் 20 ஆயிரம் வேப்ப மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.இது தவிர தேசிய எண்ணெய் வித்து இயக்கத்தில் வேம்பு, புங்கை, இலுப்பை மரகன்றுகள் வளர்க்க பின்னேற்று மானியம் ரூ.18,500 வழங்கப்பட உள்ளது.
விருப்பமுள்ள விவசாயிகள் ஒரு எக்டேருக்கு 400 கன்றுகள் நடவு செய்து பராமரிக்க வேண்டும். இந்த மரக்கன்றுகளை பராமரிக்க மானியமாக 2வது, 3வது ஆண்டிற்கு தலா 2 ஆயிரம், ஊடுபயிர் மானியமாக வழங்கப்பட உள்ளது.
விருப்ப முள்ள விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம் அல்லது அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்கள், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.