வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்
ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது.
இம் மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிச. 18 முதல் வைகை அணையில் இருந்து நீர் வெளியேறுகிறது. முறைப்பாசனம் நடைமுறையில் உள்ள நிலையில் பிப்.28 ல் வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக வினாடிக்கு 650 கனஅடி நீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டது. அது மார்ச் 5ல் வினாடிக்கு 200 கன அடியாக குறைக்கப்பட்டு நேற்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி வழக்கம்போல் வெளியேறுகிறது. அணை நீர்மட்டம் 60.43 அடி( மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 95 கனஅடி.