தீவன உற்பத்தி மைய கட்டடம் திறப்பு
தேனி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் ரூ.4.54 கோடி மதிப்பில் கால்நடை பண்ணை வளாகம் – தீவன உற்பத்தி மையத் கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்தார்.
இதற்கான விழா தேனி பல்கலையில் நடந்தது. கலெக்டர் ஷஜீவனா, எம்.பி., தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், சரவணக்குமார்,மகாராஜன், கல்லுாரி முதல்வர் ரிச்சர்டு ஜெகதீசன், பங்கேற்றனர்.
முதல்வர் கூறுகையில்,’ இந்த கால்நடைப் பண்ணை வளாகம் – தீவன உற்பத்தி மையமாகவும், மாணவர்களுக்கு கல்வி பயிலவும், செய்முறைப் பயிற்சி பெறவும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.’ என்றார்.