சூறாவளி போன்று சுற்றித் திரியும் படையப்பா: தொழிலாளர்கள் அச்சம்
மூணாறு: ஒரே நாளில் சூறாவளி போன்று நீண்ட துாரம் சுற்றித்திரியும் படையப்பா ஆண் காட்டு யானையால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மூணாறு பகுதியில் வலம் வரும் வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். குறிப்பிட்ட பகுதிகளில் வலம் வந்த படையப்பா, சமீப காலமாக தனது வழித்தடத்தை அதிகரித்து தொலை துாரம் வரை சென்று வருகிறது. ஒரே நாளில் சூராவளி போன்று நீண்ட துாரம் சுற்றித்திரியும் யானையால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மூணாறு அருகே தென்மலை எஸ்டேட் பாக்டரி டிவிஷன் பகுதியில் நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு நடமாடிய படையப்பா மதியம் 1:00 மணிக்கு பல கி.மீட்டர் கடந்து கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதிக்கு வந்தது. அப்பகுதியில் நடமாடுவதாக எண்ணிய நிலையில் மாலை 5:00 மணிக்கு இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு செல்லும் நுழைவு பகுதியான5ம் மைல் சென்றது. அங்கிருந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கன்னிமலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்றது. அங்கு தொழிலாளி ஜெயராமின் வீட்டின் அருகே இருந்த வாழைகளை தின்றதுடன் காலை 7:00 வரை குடியிருப்புகள் அருகே நடமாடியது