போலீஸ் ஸ்டேஷன் பாதுகாப்பு கருதி நாட்டு வெடிகுண்டுகள் இடமாற்றம்
பெரியகுளத்தில் கைப்பற்றிய 29 நாட்டு வெடிகுண்டுகள் பாதுகாப்பு கருதி தனியார் வெடிபொருட்கள் சேமிப்பு கிடங்கிற்கு வைக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் நடுப்புரவு காடுவெட்டி பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட பதுக்கி வைக்கப்பட்டிர
ஒரு வெடிகுண்டு வெடித்ததில் நாய் தலை சிதறி பலியானது.
அங்கு பதுக்கி வைத்திருந்த 29 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த சிவக்குமாரை 30. வடகரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ஆனந்தை 30, தேடி வருகின்றனர். இவர்கள் பயன்படுத்திய டூவீலர் கைப்பற்றப்பட்டது.
பெரியகுளம் வடகரை ஸ்டேஷனில் 29 நாட்டு வெடிகுண்டுகள் சாக்கில் சுற்றி வைக்கப்பட்டது.
இதனை ஆள் நடமாட்டம் இல்லாத கண்மாய் பகுதிக்கு கொண்டு சென்று, வி.ஏ.ஓ., ஒப்புதலுடன் வெடிக்க வைக்க போலீசார் திட்டமிட்டனர்.
இதற்கு மதுரை வெடிபொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் அனுமதி மறுத்தனர்.
ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த வெடி குண்டினால் போலீசார் அச்சமடைந்தனர்.
எனவே, தேனி வெடிகுண்டு தடுப்பு பிரிவு எஸ்.ஐ., நேரு தலைமையில் ஆலோசனை நடத்தி க.விலக்கில் அரசு உரிமம் பெற்ற பாறை உடைப்பதற்கான வெடிபொருட்கள் சேமிப்பு கிடங்கிற்கு குண்டுகள் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து சென்னை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு வடகரை இன்ஸ்பெக்டர் ஜெயராணி கடிதம் அனுப்பி உள்ளார்.