சிலமலை ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
சுகாதார வளாகம் சேதமடைந்ததால் பயன்படுத்த முடியாத அவலம் சிலமலை ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
போடி ஒன்றியம், சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட 7, 8வது வார்டில் பெண்கள் சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி சேதமடைந்ததால் ரோட்டோரத்தை பயன்படுத்தும் அவல நிலை தொடர்கிறது.
தார வளாகம் பராமரிப்பு இன்றி சேதமடைந்ததால் ரோட்டோரத்தை பயன்படுத்தும் அவல நிலை தொடர்கிறது.
சிலமலை ஊராட்சி 8 வது வார்டுக்கு உட்பட்ட மணியம்பட்டி ரோடு, 7 வது வார்டுக்கு உட்பட்ட ஆசாரி தெரு, கருப்பசாமி கோயில் தெரு பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதி தெருக்கள் மண்மேடுகளாகவும், முறையான சாக்கடை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மணியம்பட்டி செல்லும் ரோட்டில் தெருக்களின் தேங்கிய குப்பை அகற்றப்படாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அடிப்படை வசதிகள் செய்து தர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த பலனும் இல்லை. பொதுமக்கள் கூறியதாவது:
தண்ணீர் தொட்டிகள் சீரமைக்க வேண்டும்
முருகன், சிலமலை : சிலமலை 8வது வார்டு மணியம்பட்டி ரோடு ஆசாரி தெருவில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆகிறது.
அதை முறையாக பராமரிக்காததால் மேல்நிலைத் தொட்டியின் அடிப்பகுதி பில்லர் முழுவதும் சேதம் அடைந்தும், கம்பிகள் துருப்பிடித்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது.
மின் மோட்டார் பழுதாகி அருகே உள்ள போர்வெல் தண்ணீர் தொட்டி பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி உள்ளது. 7 வது வார்டு கருப்பசாமி கோயில் தெருவில் ரோடு வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி விடுகிறது.
மின் கம்பங்களில் விளக்கு இல்லாததால் தெரு இருளில் மூழ்கியுள்ளது. மயானத்தில் இறந்தவர்களை புதைக்கவும், இறுதி சடங்குகள் செய்ய தண்ணீர், விளக்கு வசதி, நிழற்கூரை வசதி இன்றி இறுதி பயணத்திலும் மக்கள் சிரமம் அடைகின்றனர்.
சேதம் அடைந்த தண்ணீர் தொட்டியை சீரமைத்தும், போர்வெல் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
அடைந்து வருகின்றனர். முட்புதர்களை அகற்றி சேதம் அடைந்த சுகாதார வளாகத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியிருப்பிற்குள் வரும் குப்பை
முத்துராஜ், சிலமல: துப்புரவு பணியாளர்கள் வீடுகளில் குப்பை சேகரிக்க வருவதில்லை. இதனால் மணியம்பட்டி மெயின் ரோட்டில் குப்பைகொட்டி வருகின்றனர்.
காற்று காலங்களில் குப்பை, தூசி காற்றில் பறந்து அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் விழுகிறது. மழை காலங்களில் கழிவுநீர் குப்பைகளில் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு நிலவுகிறது. சாக்கடை தூர்வாராதால் கழிவுநீர் தேங்கி புழுக்களாக உலா வருகின்றன.
தெருவில் போதிய விளக்கு வசதி இல்லை. தெரு இருளில் மூழ்கி உள்ளதால் பெண்கள் செல்ல அச்சம் அடைகின்றனர். ரோட்டில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், குப்பை கழிவுகளை அகற்றிடவும், தெருவிளக்கு வசதிசெய்தி ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை
எஸ்.ராமர், ஊராட்சித் தலைவர், சிலமலை : சிலமலை ஊராட்சியில் சாக்கடை, ரோடு பணிகள் நடந்து வருகிறது. தேக்கமான குப்பைகள் அகற்றவும், சேதம் அடைந்த தண்ணீர் தொட்டியை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.