மூலிகைத் தோட்டம் தரும் புதிய அனுபவம் வித்தியாசமான முயற்சிக்கு கம்பம் தம்பதியினருக்கு குவியும் பாராட்டு
காமயக் கவுண்டன்பட்டி நாட்டாண்மை காரர் தெரு தனியார் மெட்ரிக் பள்ளி மேலாளர். இவரது மனைவி ஷர்மிளா மேல் நிலைப் பள்ளி ஒன்றில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களது வீட்டில் துாதுவளை, துளசி, செம்பருத்தி, ஆடாதொடை, முல்லை, செவ்வந்தி, ரோஜா, செண்பகம், அடுக்கு மல்லி, கற்றாழை, அரளி, சங்குப்பூ, இட்லிப்பூ, தாழம்பூ என வாசம் தரும் மலர்ச் செடிகள், மூலிகைச் செடிகள் வளர்த்து வருகின்றனர்.
இதனால் இவர்கள் அமைத்துள்ள மூலிகைத் தோட்டத்தில் சுவாசிப்பதற்கு நல்ல காற்று, மணம் வீசும் மலர்களால் புத்துணர்வு கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். ”குழந்தைகளுக்கு துளசி இலைகளை பறித்து வாயில் இட்டு சுவைத்து உட்கொள்ள பழக்கப்படுத்தினால் காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்படாது.” என, அனுபவ வைத்தியம் கூறும் இத்தம்பதி, சிறிய உடல் உபாதைகள் உதாரணமாக சளி, தும்மல், இருமல் பாதிப்பு ஏற்பட்டால், தூதுவளையை பறித்து கசாயம் வைத்து குடிப்பதை பழக்கமாகவும், தூதுவளை ரசம் வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை தொடர்ந்து கடைபிடிக்கின்றனர். மூலிகைத் தோட்டத்திற்கான முன்னோட்டமாக சிறிய அளவில் துவக்கி உள்ளோம் என்கின்றனர்.