உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட மன நலத்திட்டம், மந்த்ரா மனநல மருத்துவமனை, மாவட்ட நிர்வாகம் சார்பில், உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் தேனி பங்களாமேட்டில் நடந்தது.
கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார். மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, மாவட்ட மனநலத்திட்ட அலுவலர்கள் டாக்டர் ரவிக்குமார், டாக்டர் கோரா.ராஜேஷ் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை நர்சிங் பயிற்சி கல்லுாரி மாணவர்கள், மன நல உளவியலாளர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று, ‘உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
பங்களாமேட்டில் துவங்கிய ஊர்வலம் நேருசிலை சிக்னல், பெரியகுளம் ரோடு, பெத்தாட்சி விநாயகர் கோயில் வழியாக தேனி அல்லிநகரம் நகராட்சி எதிரே நிறைவடைந்தது. ஏராளமான நர்சிங் மாணவிகள் பங்கேற்றனர்.