போலி சான்றிதழ் தந்ததாக பணியாளருக்கு நோட்டீஸ்
ஆண்டிபட்டி தாலுகா புள்ளிமான் கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக சீத்தாலட்சுமி என்பவர் 2011 முதல் பணியாற்றி வருகிறார்.
இவரது கல்வி சான்றிதழ் உண்மை தன்மை அறிய அரசு தேர்வு துறைக்கு அனுப்பபட்டது.
இவரது சான்றிதழை சரிபார்த்ததில் 10ம் வகுப்பு சான்றிதழ் போலியானது என அறிக்கை அளித்தது. இதனைத் தொடர்ந்து தேனி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அலுவலகத்தில் இருந்து சீத்தாலட்சுமிக்கு ‘உங்களை ஏன் பணியில் இருந்து நீக்கக் கூடாது’ என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.