தெருநாய்கள் தொல்லையால் நுாலகத்திற்கு வருவோர் அவதி
தேனி: தேனி-பெரியகுளம் ரோட்டில் மீறு சமுத்திர கண்மாய் அருகே தேனி தாலுகா அலுவலகமும், அதன் எதிரே மாவட்ட மைய நுாலகமும் உள்ளன. இந்த நுாலகத்திற்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து நாளிதழ் வாசிக்க வாசகர்கள் வருகின்றனர்.
இதில் பெரும்பாலானோர் வயதானவர்கள். நுாலக வாசலில் தெருநாய்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை கடித்து விடுமோ என்ற அச்சத்தில் பலர் நுாலகத்திற்கு வராமல் திரும்பி செல்கின்றனர். அவ்வப்போது
தெருநாய்கள் சண்டையிட்டுக்கொள்வதால் தாலுகா அலுவலகத்திற்கு வருவோரும் அச்சத்துடன் வரும் நிலை உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.