ஆரம்ப சுகாதார நிலையங்கள் 3 பேரூராட்சிகளில் புதிதாக அமைப்பு
தேனி: மாவட்டத்தில் பேரூராட்சிகளில் புதிதாக 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு வட்டார சுகாதார நிலையம், ஒரு நல ஆதரவு மையம் அமைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் 36 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 நகர்புற சுகாதார நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகத்துறையினால் பூதிப்புரம், மீனாட்சிபுரத்தில் தலா ரூ.60 லட்சம், க.புதுப்பட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைய உள்ளன. அதே போல் கோம்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.50 லட்சத்தில் வட்டார சுகாதார நிலையமும், மேலசொக்கநாதபுரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் நல ஆதரவு மையம் அமைப்பதற்கான பணிகள் துவங்க உள்ளன என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.