சங்க 2வது மாவட்ட மாநாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்
ஆண்டிபட்டி: மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் 2வது மாவட்ட மாநாடு ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் நடந்தது.
தேனி மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். மாநில செயலாளர் காளிதாஸ், மண்டல செயலாளர் ஆதிசிவ பெருமாள், சி.ஓ.ஐ.டி.யு., சங்க மாநில அமைப்பு செயலாளர் விஜயரெங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை விளக்கி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாநில பொருளாளர் சாமிவேல் பேசினர். மாநாட்டில் கொடி ஏற்றுதல், உறுதிமொழி ஏற்றனர். நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்டது.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் பாதுகாப்பு, அவர்களின் உரிமைகளுக்கான நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகளாக தேனி மாவட்ட தலைவராக ஜெகதீஷ், மாவட்ட செயலாளராக பாண்டி, பொருளாளராக மாரிச்சாமி தேர்வு செய்யப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாளர் பற்றாக்குறையை சரி செய்யவும், வாகனங்களின் எண்ணிக்கையை மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்கவும் அரசு நடவடிக்கைக்கு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.