புதிய அலுவலகம் லெட்சுமி நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு,
உத்தமபாளையம், : உத்தமபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் லெட்சுமி நாயக்கன்பட்டி உட்கடை கிராமங்களாக கிருஷ்ணன்பட்டி, ரோட்டுபட்டி, செல்லாயிபுரம், திடீர்புரம் பகுதிகள் உள்ளன.
ஊராட்சியில் 5 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். லெட்சுமி நாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளாகிறது. எனவே, கட்டடம் பழுதடைந்து வருகிறது. புதிய அலுவலக கட்டடம் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. விரைவில் புதிய அலுவலக கட்டடம் திறப்பு விழா நடைபெறும் என்று ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.