3,153 கன அடியாக அதிகரிப்பு
கூடலுார்: நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, பெரியாறில் 10.1 செ.மீ., தேக்கடியில் 10.82 செ.மீ., மழை பதிவானது.
இதனால், 397 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு, 3,153 கன அடியாக அதிகரித்தது. நேற்று பகல் முழுதும் தொடர்ந்து கனமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ஒரே நாளில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 124.40 அடியை எட்டியது. மொத்த உயரம் 152 அடி.
இதற்கிடையே, அணைக்கு தமிழக பகுதியில் இருந்து பொருட்கள் எடுத்துச் செல்ல கேரளா நேற்று அனுமதி வழங்கியது. இந்த தகவலை, தேனி கலெக்டர் ஷஜீவனா அறிவித்தார்.
கேரள அரசு அனுமதி வழங்காததால், ஒரு வாரத்திற்கும் மேலாக நின்றிருந்த இரண்டு தமிழக லாரிகள் திரும்பி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.