இளைஞரிடம் வழிப்பறி
ஆண்டிபட்டி தேக்கம்பட்டி அருகே சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி குமார் 21, இரு நாட்களுக்கு முன் அடைக்கம்பட்டியில் இருந்து சமத்துவபுரத்திற்கு க.விலக்கு செல்லும் மெயின் ரோடு வழியாக சென்றுள்ளார்.
சமத்துவபுரம் மண் பாதை அருகே வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி சிரஞ்சீவிகுமாரிடம் பணத்தை பறித்து சென்றனர். போலீசார் விசாரிக்கன்றனர்.