கூட்டுறவு ஊழியர் சங்க கூட்டம்
தேனி: தேனி ஓட்டலில் சி.ஐ.டி.யு., கூட்டுறவு ஊழியர் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் பிச்சைமணி தலைமையில் நடந்தது.
மாநில துணைச் செயலர் துரைச்சாமி, மாவட்ட செயலாளர் செந்தில்காமு, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜெயபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசாணைக்கு எதிராக பச்சரிசி, புழுங்கல் அரிசி என தரம் பிரித்து அபராதம் விதிக்க கூடாது, நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சரியான எடையில் அனுப்ப வலியுறுத்தப்பட்டது.