சர்ச்களில் சிறப் பு பிரார்த்தனை
தேனி: மாவட்டத்தில் சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.
தேனி மதுரை ரோடு ஆர்.சி., உலக மீட்பர் சர்ச்சில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம்இரவு 11:30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பாதிரியார் முத்து தலைமை வகித்தார். பாதிரியார் திருத்துவராஜ்,பாதிரியார் சின்னப்பன் சிறப்பு புத்தாண்டு பிரார்த்தனை நடத்தினர். இதில் ஏராளமான ஆர்.சி., கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.
தேனி என்.ஆர்.டி., ரோட்டில் பரிசுத்த பவுல் சர்ச்சில் சபை குரு அஜித்ஸ்டேன்லிதலைமையில் திருவிருந்து ஆராதனை நடந்தது. இதில் சி.எஸ்.ஐ., கிறிஸ்துவர்கள் திரளாகபங்கேற்று பிரார்த்தனை செய்தனர். புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மேலும் அரப்படித்தேவன்பட்டி கிறிஸ்துவின் மகிமை சர்ச்,இந்திராநகர் சி.எஸ்.ஐ., சர்ச்சில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திராளானகிறிஸ்துவர்கள் பங்கேற்று, ஆங்கில புத்தாண்டுவாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
சர்ச்களில் நள்ளிரவு பிரார்த்தனை
கம்பம்: ராயப்பன்பட்டி பனிமய மாதா சர்ச்சில் நள்ளிரவு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்த சர்ச்சில் உள்ள பெரிய வெண்கல மணி புத்தாண்டு பிறந்த போது, நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்தது. இதில் திரளாக கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை பரிமாறினர்.
இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கம்பம், உத்தமபாளையத்தில் உள்ள 10 க்கும் மேற்பட்ட சர்ச்சுகளில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது
போடி: புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் உலக அமைதி வேண்டி மாதாவுக்கு கூட்டு பிரார்த்தனை, சிறப்பு வழிபாடு நடந்தது.தென்னிந்திய திருச்சபை சர்ச்சில் குடும்ப நன்மை, உலக அமைதிக்காக சிலுவை வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்றன.