தேனி ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி
தேனி: தேனி — பெரியகுளம் ரோடு, பாரஸ்ட்ரோடு – பங்களாமேடு ரயில்வே கேட் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் இரவு விடிய, விடிய நடந்தது.
ரயில்வே கிராஸிங் கேட் பகுதிகளில் தண்டவாளங்களில் அடியில் உள்ள கான்கிரீட் தடுப்புகளில் சரளைக் கற்களுடன் மண், சேர்ந்து பாதிப்பு ஏற்படும். இதனை ரயில்வே கட்டுமான பிரிவு அதிகாரிகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பது வழக்கம்.
இப்பணிகள் ரயில்வே உதவிப் பொறியாளர் பார்த்திபன் தலைமையில் கட்டுமானப் பிரிவு ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் மறுநாள் காலை 4:00 மணி வரை தேனி -பெரியகுளம் ரோடுபெத்தாட்சி விநாயகர் கோயில் அருகில் பராமரிப்பு பணி நடந்தது.நேற்றிரவு 11:00 மணி முதல் இன்று காலை 4:00 மணி வரை பாரஸ்ட் ரோட்டில்பங்களாமேடு ரயில்வே கேட் பகுதியில் இப்பணிகள் நடந்தது. இதனால் இந்த ரோடுகளில் இரவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன.