தேனியில் நடிகர் சசிகுமார் பேச்சு ஊர் என்றால் பள்ளியும், கோயிலும் அவசியம்
தேனி: ‘ஊர் என்றால் அதில் பள்ளி, கோயில் அவசியம், பள்ளியை மேம்படுத்த அரசை மட்டும் எதிர்பார்க்காமல் கிராமத்தினர் சேர்ந்து உதவி செய்யவேண்டும்’, என பள்ளி விழாவில் நடிகர் சசிகுமார் பேசினார்.
தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி மேம்பாட்டிற்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
இதில் நடிகர் சசிகுமார் பேசியதாவது: அரசு பள்ளியை மேம்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சி பற்றி தெரிந்து கொண்டேன். இதற்காக முயற்சித்த தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு நன்றி. அரசுப்பள்ளியை மேம்படுத்தி ஆங்கிலம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள். அரசுப்பள்ளிக்கு குறைவான மாணவர்கள் வரும் காலகட்டத்தில் அதை மேம்படுத்துவதற்கு உழைக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.பள்ளியை மேம்படுத்த அரசை மட்டும் நம்பாமல் கிராமத்தினரும் சேர்ந்து உதவி செய்ய வேண்டும். ஒரு ஊர் என்றால் பள்ளியும், கோயிலும் அவசியம். இவ்வாறு பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை பாண்டிலெட்சுமி, நகராட்சி கவுன்சிலர் கடவுள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.