பா.ஜ., மாவட்ட தலைவர் தேர்வு..
தேனி: தேனி மாவட்ட பா.ஜ., தலைவர் பதவிக்கான உள்கட்சித் தேர்தல் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் 20க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.
இவர்களில் மூவர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்தனர். மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள ராஜபாண்டியன் தேனி மாவட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் 2011 முதல் 2014 வரை மாவட்டத் தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.