வெண்டைக்காய் ஏலம் எடுப்பதில் தகராறு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வடக்கு மூணாண்டிபட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி 39, வெண்டைக்காய் வியாபாரம் செய்து வருகிறார்.
இதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி 24, வெண்டைக்காய் வியாபாரம் செய்து வருகிறார்.
தோட்டத்தில் விவசாயிகளிடம் வெண்டைக்காய் ஏலம் எடுப்பதில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இரு நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் செல்லப்பாண்டி, பால்பாண்டியை தரக்குறைவாக பேசியதுடன் வியாபாரத்தில் போட்டியை முன் விரோதமாக வைத்து கொலை மிரட்டல் கொடுத்துள்ளார். பால்பாண்டி கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.