திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வலியுறுத்தல்
பெரியகுளம்: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என உலக திருக்குறள் பேரவை துணைத்தலைவர் சங்கர சீத்தாராமன் பேசினார்.
பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்ற 70 வது ஆண்டு விழா திருக்குறள் போட்டி பரிசளிப்பு விழா தலைவர் ரத்தினவேலு தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் சிதம்பர சூரியவேலு, பொருளாளர் தாமோதரன் முன்னிலை வகித்தனர். அமைப்பாளர் புலவர் ராஜரத்தினம் வரவேற்றார். உலக திருக்குறள் பேரவை துணைத்தலைவர் சங்கரசீத்தாராமன் மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து பேசுகையில்
திருவள்ளுவர் கடவுள் அவரை தினமும் வணங்குவோம். காலத்திற்கும் நம்மோடு பயணிக்கும் பெரும் புதையல் திருக்குறள்.
இதனை படித்து மனதில் நிறுத்தி, நல் வழியில் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். இதனை நம் வாழ்வியலாக மாற்றி அறவழியில் சம்பாதித்து, மகிழ்ச்சியாக வாழ்வோம். திருக்குறளை தேசியநூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார். திருக்குறள் போட்டியில் முதலிடம் பெற்ற ரங்ககிருஷ்ணன் நடுநிலைப்பள்ளிக்கு பி.டி.சி., நினைவு சுழற் கோப்பையும், எட்வர்ட் நினைவு நடுநிலைப்பள்ளி இரண்டாம் இடமும், டிரயம்ப் நடுநிலைப் பள்ளி மூன்றாம் இடம் பிடித்தது.
1330 குறட்பாக்கள், கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.-