Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

‘வீடுகளில் சிட்டுக் குருவிகளுக்கு கூடு அமைத்து உதவுங்கள்’

கம்பம்: ‘மாணவர்கள் வீடுகளில் சிட்டுக்குருவிகளுக்கு கூடு அமைத்து அழிவில் இருந்து பாதுகாக்க உதவ வேண்டும்’ என கம்பம் நாலந்தாபள்ளி தாளாளர் விஸ்வநாதன் பேசினார்.

உலக சிட்டுக்குருவிகள் தினத்தை (மார்ச் 20) முன்னிட்டு சிட்டுக்குருவி பாதுகாப்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தாளாளர் பேசியதாவது:

நகரமயமாதல், ரசாயன பூச்சி கொல்லி பயன்பாடு அதிகரிப்பு – போன்ற காரணங்களால் சிட்டுக் குருவி இனம் அழியும் அபாயம் உள்ளது. 2010 ல் பறவைகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் மேற்கொண்ட முயற்சியால் 2012ல் டில்லியின் தேசிய பறவையாக சிட்டுக் குருவி அறிவிக்கப்பட்டது.

மாணவர்களும் வீட்டுக்கு ஒரு சிட்டுக் குருவி கூடு அமைக்க வேண்டும். அதில் சிறிது தானியம், தண்ணீர் வைக்கலாம். இதன் மூலம் சிட்டுக் குருவி இனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். பூக்களில் அயல் மகரந்த சேர்க்கை நடைபெற சிட்டுக் குருவிகள் பெரிதும் உதவுகின்றன.

சிட்டுக் குருவிகளை பாதுகாப்போம் என்றார். நிகழ்ச்சியில் முதல்வர் மோகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, அலுவலக மேலாளர் விக்னேஷ் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *