நுாலகம் செயல்பாட்டிற்கு வர நடவடிக்கை தேவை
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், மொட்டனூத்து ஊராட்சி கொப்பையம்பட்டியில் புதிய நூலக கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
குழந்தைகள் மற்றும் இளம் பருவத்திற்கான பொது நூலகம் 2023-2024ம் ஆண்டு திட்டத்தில் கொப்பையபட்டியில் ரூ.22 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வுகளில் கிராமப்புறங்களில் இருந்து பங்கேற்பவர்களுக்கான புத்தகங்களுடன் நூலகத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.