Sunday, April 27, 2025
மாவட்ட செய்திகள்

தேக்கடியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – படகு சவாரிக்கு டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம்

பள்ளி கோடை விடுமுறையால் தேக்கடியில் படகு சவாரி செய்வதற்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். குறைவான படகுகளே இயக்குவதால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

கேரளாவில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியில் படகு சவாரி முக்கிய பங்கு வகிக்கிறது. அடர்ந்த வனப் பகுதிக்கு நடுவே தேங்கியிருக்கும் ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே கரையோரப் பகுதியில் யானை, காட்டு மாடு, காட்டுப்பன்றி’ மான் உள்ளிட்ட வன விலங்குகளை கண்டு ரசிப்பதில் சுற்றுலா பயணிகளுக்கு ஆனந்தம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் அதிகமான எண்ணிக்கையில் தேக்கடிக்கு வருகின்றனர். கேரள வனத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 6 படகுகள் இயக்கப்படுகின்றன. படகு சவாரிக்கு ஒருவருக்கு கட்டணம் ரூ. 385 ஆகவும், நுழைவுக் கட்டணம் ரூ. 70ம் வசூலிக்கப்படுகிறது. காலை 7:00 மணி, 9:00, 11:00 மதியம் 1:30, 3:30 ஆகிய ஐந்து டிரிப்புகள் இயக்கப்படுகின்றன. இருந்த போதிலும் கூடுதலானோர் வருவதால் படகு சவாரிக்கு டிக்கெட் கிடைக்காமல் பலர் திரும்பிச் செல்கின்றனர்.

அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மட்டுமே படகில் சுற்றி காண்பிக்கப்படுகிறது. இதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம், கூடுதலாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *