தெரு நாய்களால் அச்சுறுத்தல்
மூணாறு : மூணாறு நகரில் தெரு நாய்கள் அதிகம் நடமாடுவதால், சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் ஆகியோர் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர்.
சுற்றுலா நகரான மூணாறில் தெரு நாய்கள் அதிக எண்ணிக்கையில் நடமாடுகின்றன.
அவை நகர் முழுவதும் கூட்டமாக வலம் வருவதால் சுற்றுலா பயணிகள், பொது மக்கள் ஆகியோர் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். தவிர நாய்களின் நடமாட்டம் சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.
நாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட சிக்கல் உள்ளதால், பாதுகாப்பு கருதி அவற்றை நகரை விட்டு வெளியேற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.