கலெக்டர் அலுவலகத்தில் புத்தகம் வாசிக்க ஏற்பாடு
தேனி : கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் மனு வழங்க, சான்றிதழ்கள் பெறவும், அரசு திட்டங்களில் பயன்பெறவும் பல்வேறு பணிகளுக்காக பலரும் வந்து செல்கின்றனர். வரும் பொது மக்கள் ஓய்வு நேரங்களில் புத்தகங்கள், நாளிதழ்கள் வாசிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் புத்தகங்கள் வைப்பதற்கான அலமாரி, பொது மக்கள் அமர்ந்து படிக்க இருக்கை வசதி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வாசிப்பு பகுதி விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் தெரிவித்தார்.
இதே போல் பெரியகுளம் தாலுகா அலுவலகத்திலும் பொது மக்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க நுாலகம் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.