Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

பிளஸ் 1 பொதுத் தேர்வில் 13,176 பேர் பங்கேற்பு

தேனி: மாவட்டத்தில் நடந்த பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வில் 13,176 பேர் பங்கேற்றனர்.

மாவட்டத்தில் 141 பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 6,283 மாணவர்கள், 6,851 மாணவிகள் என மொத்தம் 13,134 பேர், கடந்தாண்டு தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறாத பிளஸ் 2 மாணவர்கள் 198 பேர் மற்றும் தனித்தேர்வர் 130 என மொத்தம் 13,462 பேருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தேர்வு 54 மையங்களில் நடந்தது.

தேர்வினை பிளஸ் 1 மாணவர்கள் 12,924 பேர், பிளஸ் 2 மாணவர்கள்139 பேர், தனித்தேர்வர்கள் 113 பேர் என மொத்தம் 13,176 பேர் எழுதினர்.

பிளஸ் 1 மாணவர்கள் 210 பேர், பிளஸ் 2 மாணவர்கள் 59 பேர், தனித்தேர்வர்கள் 17 பேர் என மொத்தம் 286 பேர் ‘ஆப்சென்ட்’ ஆகினர். இதில் பள்ளி மாணவர்கள் 167 பேர், மாணவிகள் 102 பேர் ஆவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *