Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

மளிகைக் கடைக்காரர்,மனைவி வங்கி கணக்குகளில் ரூ.24.69 லட்சம் ‛ அபேஸ்: பீஹார் வாலிபர் கைது

தேனி : தேனி மாவட்டம், தேவாரம் மளிகைக் கடைககாரர், மனைவியின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.24.69 லட்சத்தை வேறு வங்கிக்கணக்கிற்கு மாற்றி, மோசடி செய்த வழக்கில் பீஹாரை சேர்ந்த அர்ஜூன்குமாரை 22,பெங்களூரூவில் கைது செய்த போலீசார் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தேவாரம் ஏ.ஆர்.டி., காலனியில் பலசரக்கு வைத்திருப்பவர் சிவநேசன் 42. இவரது மனைவி அடகுகடை நடத்தி வருகிறார். இருவரும் தனித்தனியாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். இருவரும் தேவாரம் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தனர்.

வங்கியின் பணப்பரிவர்த்தனை செயலிகளை தங்களது அலைபேசிகளில் பிறர் உதவியுடன் பயன்படுத்தினர். இந்த செயலிகளில் இருவரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பணப்பரிவர்த்தனைகளை சரி பார்ப்பர். பிப்ரவரியில் பரிவர்த்தனையை சரிபார்த்தபோது 2024 பிப்.,23 முதல் மார்ச் 15 வரை (21 நாட்களில்) வங்கிக் கணக்குகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூ.24 லட்சத்து 69 ஆயிரத்து 600 வரை திருடப்பட்டு இருந்தது.

அதிர்ச்சி அடைந்து வங்கிகளுக்கு சென்று விபரங்களை தெரிவித்தனர். வங்கியில், ஐந்து வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது எனதெரிவித்தனர். இத்தம்பதியின் இரண்டரை வயது மகள்கள் இருவர் ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் போது இத்தவறு நடந்துள்ளது கண்டறியப்பட்டது.

சிவநேசன் புகாரில் தேனி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் பெங்களூருவில் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றிய பிஹார் மாநிலம் பாட்னா அஹமத்பூர்டோலாவை சேர்ந்த அர்ஜூன்குமாரை கைது செய்தனர். விசாரணையில், அர்ஜூன்குமாரின் நண்பர்கள் நீரஜ், அனிலுடன் சேர்ந்து வங்கிக் கணக்கு துவங்கி, அலைபேசி சிம்களை விற்பனை செய்து, மோசடியில் பணம் ஈட்டுவது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *