பிரதான் பொம்மை எரிப்பு; வேட்டியில் பற்றியது தீ
தேனி : போடியில் மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை தி.மு.க.,வினர் எரித்த போது, நிர்வாகியின் வேட்டியில் தீ பற்றியதால், அவர் வேட்டியை அவிழ்த்து போட்டு ஓட்டம் பிடித்தா
லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தி.மு.க., – எம்.பி.,க்கள் நாகரிகமற்றவர்கள் என பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று தேனி மாவட்டத்தில் அவரது உருவபொம்மையை எரித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போடி, தேவர் சிலை அருகே நடந்த மத்திய அமைச்சரின் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சியில், வார்டு தி.மு.க., செயலர் சந்திரசேகரின் வேட்டியில் தீப்பற்றியது. அவர் வேட்டியை அவிழ்த்து போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார்.
தேனி, நேரு சிலை அருகே நடந்த உருவபொம்மை எரிப்பில் நகர நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாகண்ணன் மீது திடீரென தீப்பற்றியது. அதை அணைத்தனர். அவரது கையில் தீக்காயம் ஏற்பட்டது.