ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி ஆகிய ஊர்கள் உள்ளன. ஒன்றரை கி.மீ., தூரம் உள்ள ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடைகள், வீடுகளை நீட்டிப்பு செய்து பலரும் ஆக்கிரமித்துள்ளனர்.
இது குறித்து தொடர்ந்து எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடைகள், வீடுகள் முன்புறம் இருந்த தகர செட்டுகள், கடைகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்டவர்கள் தாமாக முன்வந்து அகற்றி வருகின்றனர்.
அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் பேரூராட்சி, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டு வருகிறது.
இன்னும் ஓரிரு நாளில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.