கல்லுாரி மாணவர்களுக்கு வாக்காளர் அட்டை இருப்பதை உறுதி செய்ய கடிதம்
தேனி:18 வயதுடைய மாணவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்ய கலெக்டர்கள் மூலம் கல்லுாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து 18 வயதை எட்டிய அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்யவும், தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.