பகவதியம்மன் கோயிலில் இன்று அக்னி சட்டி திருவிழா
பெரியகுளம் : பெரியகுளம் பகவதியம்மன் கோயில் திருவிழாவில் இன்று பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.
பெரியகுளம் வடகரை மலைமேல்வைத்தியநாத சாமி கோயிலின் உபகோயிலான பகவதியம்மன் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இக் கோயிலில் மார்ச் 4 ல் சாட்டப்பட்டது. மார்ச் 10 முதல் இன்று மார்ச் 19 வரை பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. தினமும் அம்மன் யானை, அன்னபட்சி, ரிஷபம், சிம்மம், மின்விளக்கு அலங்காரத்தில் வீதி உலா வருகிறார். முக்கிய திருவிழாவான இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபடுவர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுந்தரி, மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.