மண்டபத்தை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: தேனி மாவட்டம் பெரியகுளம் தங்கப்பாண்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:பெரியகுளத்தில் ஜெயராஜ் நாடார் மண்டபம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.
கட்டடம் பழுதடைந்து மோசமாக உள்ளது. கழிப்பறை, தண்ணீர் வசதி இல்லை. மின் வயர்கள் அறுந்து தொங்குகின்றன. மழைக் காலங்களில் மண்டபத்திற்குள் நீர் தேங்குகிறது.
அச்சுறுத்தலாக உள்ள கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய மண்டபம் அமைக்க வலியுறுத்தி கலெக்டர், பெரியகுளம் நகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.