மகள், மருமகள் ந கை திருடிய பெண் உள்பட இருவர் கைது
மூணாறு : இடுக்கி அருகே மகள், மருமகள் தங்க நகைகளை திருடியவர், அவருக்கு உதவியவர் என இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டம் இடுக்கி அருகே தங்கமணி அச்சன்கானம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் மனைவி பின்சி 53. இவர், மகன் அபிஜித்தின் மனைவி சந்தியாவின் 14 பவுன், மகள் மீராவின் 10 பவுன் தங்க நகைகளை திருடி அடகு வைத்தார். தங்கமணி போலீசில் சந்தியா மாமியார் மீது புகார் அளித்தார்.
அவர் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றம் சென்றதால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. முன்ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து பின்சி தலைமறைவானார்.
அதனால் தாயார் மீது ராணுவ வீரரான மகன் அபிஜித் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் எபி தலைமையில் போலீசார் பின்சியையும், அவர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய மூவாற்றுபுழாவைச் சேர்ந்த அம்பிகா 49, வைகைது செய்தனர். பின்சி மீது திருட்டு, மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் பணத்தை மாந்திரீகம் உள்பட மோசமான செயல்களுக்கு பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.