அம்பேத்கர் பிறந்த நாள் விழா
சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
மாவட்டத்தில் பெரியகுளம், அரண்மனைப்புதுார், கண்டமனுார் உள்ளிட்ட 8 இடங்களில் அம்பேத்கர் சிலைகள் உள்ளன. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அரண்மனைப்புதுாரில் உள்ள அவரது சிலைக்கு ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் நிர்வாகிகள் உமையராஜன், மணிகண்டன் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். அண்ணல் அம்பேத்கர் மக்கள் பேரவை தலைவர் லட்சுமணன் தலைமையில் துணைத்தலைவர் பாண்டி, செயலாளர் செந்தில், நிர்வாகிகள் சுரேஷ்குமார், செல்வகுமார், குணபாலன், சண்முகவேல் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.
காங்., சார்பில் எஸ்.சி., பிரிவு மாவட்ட தலைவர் இனியவன் தலைமையில் தேனி நகரத் தலைவர் கோபிநாத், நிர்வாகிகள் சம்சுதீன், அபுதாஹீர், பெத்தனசாமி, பாலசுப்ரமணியம், சங்கரநாராயணன், முனியாண்டி, பாண்டி, பழனிசாமி, நாகராஜ் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.
பெரியகுளம்: பெரியகுளத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட் நுழைவுப் பகுதியில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியகுளம் பகுதிகளில் இருந்து பொது மக்கள், அரசு பணியாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் காலை முதல் இரவு வரை மாலை அணிவித்தனர்.
ஆண்டிபட்டி: வி.சி.க., சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது. தொகுதி செயலாளர் முத்துராமன் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் காமாட்சி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு நிர்வாகி தங்கவேல் கொடி ஏற்றினார். சக்கம்பட்டி வீரப்ப அய்யனார் கோயில் அருகே அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் சதீஷ், குழந்தைராஜ், மாவட்டத் தொண்டர் அணி அமைப்பாளர் சர்வேஸ்வரன், தி.மு.க., வினர் கலந்து கொண்டனர்.