Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

மேகமலை, செண்பகத்தோப்பு, 11 மலையேற்ற பாதைகளில் சூழல் சுற்றுலா

தேனி மாவட்டத்தில் மேகமலை, செண்பகத்தோப்பு, 11 மலையேற்ற டிரெக்கிங் பாதை வசதிகளுடன் சூழல் சுற்றுலா அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் மேகமலை டிவிஷன் துணை இயக்குனரகம் தீவிர ஏற்பாடுகளை செய்து, பயன்பாட்டிற்கு தயார் படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம் நாட்டின் 51வது புலிகள் காப்பகமாகவும், தமிழகத்தின் 5வது புலிகள் காப்பகமாக கடந்த 2021ல் அறிவிக்கப்பட்டது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியின் தொடர்ச்சியாகவும், பெரியாறு புலிகள் காப்பகத்தில் ஒரு பகுதியின் தொடர்ச்சியாக அமைந்துள்ள இக்காப்பகம், ‘வசீகரிக்கும் இயற்கை அழகின் சொர்க்கம்’ என, மேகமலை டிவிஷன் இணை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும் இங்கு துணை இயக்குனரகம் சார்பில் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்துவதற்கான களப்பணிகளை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளும் நடக்கின்றன.

ஆன்மிக, சூழல் சுற்றுலா மையங்கள்:

இந்த புலிகள் காப்பகம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், காட்டு அழகர் கோயில், மங்கலதேவி கண்ணகி கோயில் உட்பட 3 ஆன்மீக ஸ்தலங்களையும், சுருளி அருவி, சின்னச்சுருளி நீர்வீழ்ச்சி, மகாராஜாமெட்டு, சாஸ்தாகோயில், செண்பகத்தோப்பு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளிட்ட இடங்களை, சூழல் சுற்றுலா இடங்களாக வரையறுத்துள்ளது.

இதுதவிர 11 டிரெக்கிங் வழித்தடங்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதில் தென்பழனி முதல் சின்னச்சுருளி, சின்னச்சுருளி முதல் மஞ்சனுாத்து, 9வது மைல் மஞ்சனுாத்து, வேலப்பர் கோயில் முதல் காரப்பாறை, போர்பே அணை முதல் ஒக்கரை, சுருளி நீர்வீழ்ச்சி முதல் முடநாரி, மகாராஜா மெட்டு முதல் 10 நம்பர் காடு, வட்டப்பாறை, செண்பகத்தோப்பு முதல் அழகர்கோயில், செண்பகத்தோப்பு முதல் மேற்கு புதுப்பட்டி, தாணிப்பாறை முதல் சுந்தரமகாலிங்கம் கோயில் ஆகிய 11 மலையேற்றங்களுக்கு நிபந்தனைகளுடன் குறிப்பிட்ட காலங்களில் அனுமதி வழங்கப்படும் என துணை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *